வெள்ளைப் புலி (White tiger) என்பது அரியவகை மரபணுவுடன் கூடிய ஒருவகை புலி வகையாகும். வெள்ளைப்புலிகள் அதன் வரிகளுடன் கூடிய வெண்மை நிறத்தைப் பெற இந்த மரபணுவே காரணமாகும். வெள்ளைப் புலிகள் செம்மஞ்சள் நிறப்புலிகளுடனும் இனப்பெருக்கம் செய்யும். இதனால் அவற்றின் ரோமங்கள் செம்மஞ்சள் நிறத்தில் உருவாகிவிடும். ஒரேயொரு விதிவிலக்கு என்னவென்றால், செம்மஞ்சள் நிற புலிகள் ஏற்கனவே ஒரு கலப்பின புலியாக இருக்கும்பட்சத்தில், ஒவ்வொரு குட்டியும் அரிய வகை வெள்ளைப்புலியாகவோ அல்லது செம்மஞ்சள் நிற புலியாகவோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கக்கூடிய 50% வாய்ப்பு இருக்கிறது.
இரண்டு வேறுபட்ட கருமுட்டைகளைக் கொண்ட புலிகள் இனப்பெருக்கத்தில் ஈடுபடும் போது, அவற்றின் வழிதோன்றல்கள் வெள்ளைப் புலிகளாக இருக்க 25% வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் செம்மஞ்சள் நிற கலப்பின புலிகளாக இருக்கவும் வாய்ப்புகள் உள்ளன. 1970ஆம் ஆண்டில், ஷாசி மற்றும் ரவி என்று பெயரிடப்பட்ட செம்மஞ்சள் நிற புலிகள் ஜோடி, அலிப்போர் மிருகக்காட்சிசாலையில் 13 குட்டிகளை ஈன்றன; அவற்றின் மூன்று வெள்ளைப் புலிக்குட்டிகளாகும்.[4]
இரண்டு வெள்ளை புலிகள் இனப்பெருக்கம் செய்தால், 100 சதவீதம் அவற்றின் குட்டிகள் ஒத்தப்புணரி வெள்ளைப் புலிகளாகவே இருக்கும். ஒரேகுடும்பத்தைச் சேர்ந்தவைகளுக்கு இடையிலான புணர்ச்சியானது, ஒத்தப்புணரித்தன்மையை அதிகரிக்கிறது.
வெள்ளை மரபணுக்கள் இல்லாத செம்மஞ்சள் நிற புலிகளோடு ஒப்பிடும் போது, பிறக்கும் போதும் சரி, பருவமடைந்த நிலையிலும் சரி வெள்ளைப் புலிகள் அளவில் மிகவும் பெரிதாக இருக்கின்றன.[5] அவற்றின் வித்தியாசமான நிற அமைப்பிற்கு அப்பாற்பட்டு, அளவில் பெரிதாக இருப்பதும் அவற்றிற்கு ஒருவகையில் ஆதாயமாகவே இருக்கின்றன. இத்தன்மை அவற்றை பயங்கரமாக எடுத்துக்காட்டுகின்றன.
1960-களில் புதுடெல்லி மிருகக்காட்சிசாலையின் இயக்குனர், கைலாஷ் ஷன்கலா கூறுகையில், "வெள்ளை மரபணு தேவையில்லை என்றாலும் கூட, அதன் கூட்டத்திடையே ஓர் அளவிற்கு மரபணுவைத் தக்க வைத்திருப்பதும் அவசியமாகும்" என்றார்.[6]
தற்போது, உலகளவில் பலநூறு வெள்ளைப்புலிகள் பிடிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் சுமார் 100 புலிகள் இந்தியாவில் இருக்கின்றன. அவற்றின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. வெள்ளைப்புலிக்கான அரியவகை மரபணுக்கள் வங்காளப் புலிகளிடம் இருந்து மட்டும் தான் வந்ததா அல்லது பிற சைபீரிய மூதாதையர்களிடம் இருந்தும் வந்ததா என்பது தெளிவில்லாமல் இருக்கிறது.
வெள்ளைப்புலிகளின் இந்த வித்தியாசமான நிறஅமைப்பின் காரணமாக, இவை மிருகக்காட்சிசாலைகளிலும், ஏனைய பொழுதுபோக்கு மையங்களிலும் மிகவும் பிரபலமாகி வருகின்றன. இரண்டு வெள்ளைப்புலிகளை உயிர்கலப்பு செய்விப்பதிலும், அவற்றை வித்தைகளைச் செய்து காட்ட பயிற்சி அளிப்பதிலும் சீய்க்ஃபெரட் & ராய் மிகவும் பிரபலமானவர்கள்.
ரோன் ஹாலிடே, ஜாய் ஹாலிடே மற்றும் சக் லிஜ்ஜா ஆகிய முப்பெரும்குழு புலிகளைக் கொண்டு வித்தைக் காட்டும் நிகழ்ச்சி ஒன்றை HBO ஆவணப்படமாக செய்தார்கள். அவர்கள் ஒரு வெள்ளைப்புலியுடன் இந்த நிகழ்ச்சியை நடத்திய போது அதில் இரண்டு நபர்கள் கொல்லப்பட்டார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக