எக்டிசாசோவா
எக்டிசாசோவாக்கள் புரோடோஸ்டோம்கள் ஆகும். இவை சிறகுதிர்ப்பது அல்லது தோலுரிவதன் (ecdysis) மூலம் வளரும் பொதுவான பழக்கத்தால் இந்த பெயரிடப்பட்டன. மிகப்பெரும் விலங்கு தொகுதியான கணுக்காலிகள் (Arthropoda) இதற்கு சொந்தமானதே. இதில் பூச்சிகள், சிலந்திகள், நண்டுகள் மற்றும் அவற்றின் உறவினங்கள் அடக்கம். இந்த அனைத்து உயிரினங்களும் பொதுவாக இணை ஒட்டுறுப்புகளுடன் உடல் தொடர்ச்சியான பிரிவுகளாகப் பகுக்கப்பட்டு கொண்டுள்ளன. ஓனிகோபோரா மற்றும் டார்டிகிராடா ஆகிய இரண்டு சிறு தொகுதிகளும் கணுக்காலிகளின் (Arthropoda) நெருங்கிய உறவினங்கள். இவை இதே பண்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன.எக்டிசாசோவாக்கள் நெமடோடா அல்லது உருளைப்புழுக்களையும் அடக்கியிருக்கின்றது. இவை இரண்டாவது மிகப்பெரிய விலங்கு தொகுதியாகும். உருளைப்புழுக்கள் பொதுவாக நுண்ணுயிர்களாக இருப்பதோடு, ஏறக்குறைய நீர் இருக்கும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் காணப்படக்கூடியவை. ஏராளமானவை முக்கியமான ஒட்டுண்ணிகள். நெமடோமார்பா அல்லது குதிரைமுடி புழுக்கள், மற்றும் கினோரின்ஜா, பிரியபுலிடா, மற்றும் லோரிசிஃபெரா ஆகியவை அவற்றுக்குத் தொடர்புடைய சிறு தொகுதிகள் ஆகும். இந்த பிரிவுகள் சூடோகொயலம் (pseudocoelom) என்று அழைக்கப்படுகிற ஒரு குறைந்துபட்ட கொயலமைக் கொண்டுள்ளன.
புரோடோஸ்டோம்களின் எஞ்சிய இரண்டு பிரிவுகளும் சில சமயங்களில் ஒன்றாக ஸ்பைரலியா என்று ஒரே பிரிவாக பகுக்கப்படுகின்றது. காரணம் இரண்டிலுமே முளைக்கருக்கள் சுருள் பிளவுடன் உருவாகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக