புதன், 14 டிசம்பர், 2011

இயல் தோற்றம்

முதலைகளின் உருவமானது அதன் கருமுதலை முதல் உவர்நீர் முதலைகள் போன்ற வகைப்பாடுகளை பொருது பல்வேறு அளவுகளில் காணபடுகின்றன. பெரும்பாலும் உப்பு நீர் முதலைகள் நன்னீர் முதலைகளை விட அளவில் மிக பெரியதாக இருக்கின்றன. Palaeosuchus and Osteolaemus இனத்தை சேர்ந்த நன்கு வளர்ந்த முதலைகள் ஒரு மீட்டர் நீளம் முதல் ஒன்றரை மீட்டர் நீளம் வரை வளர கூடியவை. சில முதலை வகைகள் 4.85(15.9அடி) நீளமும் 1200 கிலோ கிராம் எடையும் கொண்டவையாக பிரமாண்டமாக இருக்கும். முதலைகளில் சராசரி வாழ் நாள் 70 ஆண்டுகள் ஆகும். சில முதலைகள் 100 ஆண்டுகள் வரை வாழ்கின்றன. ஆத்திரேலிய மிருககாட்சிசாலையில் உள்ள நன்னீர் முதலையில் ஒன்று 130 ஆண்டுகள் உயிர் வாழ்ந்து சாதனை படைத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக