நண்டு
நண்டு உலகின் எல்லா கடல்களிலும் காணப்படும் ஒரு நீர்வாழ்உயிரினமாகும். நன்னீர் நிலைகளிலும் காணப்படும் நண்டு இனங்களும் உண்டு. சில மில்லிமீற்றர் (mm) அகலமான நண்டுகள் முதல் கால் அகலம் நான்கு மீற்றர் (m) வரை வளரும் யப்பானியச் (Japanese) சிலந்தி நண்டு வரை பல அளவுகளிலும் காணப்படுகிறது. நண்டுகள் பொதுவாக தட்டையான ஓடும் ஐந்து சோடி கால்களும் கொண்டவை. இவற்றில் முதற்சோடிக் கால்கள் கவ்விகளாக மாற்றமடைந்துள்ளன.
நண்டுகள் மேல் ஓட்டினை உடையன. ஆண்டுக் கொருமுறை மேலோடுகள் களன்று புதுப்பித்துக் கொள்கின்றன. நண்டுகள் கூட்டுக்கண்கள் இரண்டைக் கொண்டவை.
பெண் நண்டுகள் ஆண் நண்டுகளிலும் பார்க்க அகலமான வயிற்றுப்பகுதியைக் கொண்டுள்ளன. வயிற்றின் கீழேயே அவை தம்முட்டைகளைக் கொண்டுள்ளன.
நண்டு மிகவும் பிரபலமான கடலுணவு ஆகும். கடலுணவுகளில் 20% நண்டுகளே. ஆண்டுதோறும் ஒன்றரை மில்லியன் தொன்னுக்கும் (Ton) அதிகமான நண்டுகள் உணவாகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக