லோபோட்ரோசாசோவா
லோபோட்ரோசாசோவா மெல்லுடலிகள் (Mollusca) மற்றும் வத்தசைப்புழுக்கள் (Annelida) ஆகிய இரண்டு மிக வெற்றிகரமான விலங்கு தொகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது. விலங்கு தொகுதியில் இரண்டாவது மிகப்பெரியதான முன்னையதில், நத்தைகள், கிளிஞ்சல்கள், மற்றும் கடற்கணைகள் ஆகியவை அடக்கம். பிந்தையதில் மண்புழுக்கள் மற்றும் அட்டைகள் போன்ற கூறுபிரிந்த புழுக்கள் அடங்கியிருக்கின்றன. இந்த இரண்டு பிரிவுகளும் அவற்றில் பொதுவாக இருக்கும் ட்ராகோபோர் லார்வாக்களின் காரணமாக நெடுங்காலமாக நெருங்கிய உறவினங்களாக கருதப்படுகின்றன. ஆனால் வத்தசைப்புழுவினம் (Annelida) கணுக்காலிகளுக்கு (Arthropoda) நெருங்கியவையாகக் கருதப்படுகின்றன. ஏனென்றால் இரண்டும் கூறுபட்ட உடல் கொண்டவை.லோபோட்ரோசாசோவா நெமர்டியா அல்லது ரிப்பன் புழுக்கள், சிபுன்குலா, மற்றும் லோபோபோர் என்று அழைக்கப்படும் வாயைச் சுற்றி அமைந்த ஒரு பிசிர் உரோம அமைப்பு விசிறியைக் கொண்டிருக்கும் பல தொகுதிகள் ஆகியவற்றையும் அடக்கியிருக்கிறது. அவை மரபுவழியாக லோபோபோரேட்டுகள் என்று ஒன்றாக பிரிக்கப்பட்டு வந்தன.ஆனால் இப்போது அவை பாராபைலெடிக் என்றும், சில நெமர்டியாவுக்கு நெருக்கமானவை என்றும், சில மெல்லுடலிகள்(Mollusca) மற்றும் வத்தசைப்புழுக்களுக்கு(Annelida) நெருக்கமானவை என்றும் கருதப்படுகிறது. புதைபடிவ பதிவுகளில் பிரதானமாகக் காணப்படும் பிராசியோபோடா அல்லது விளக்கு கூடுகள், என்டோபிராக்டா, போரோனிடா, மற்றும் சாத்தியமான அளவில் பிரையோசோவா அல்லது பாசி விலங்குகளும் இவற்றில் அடங்குகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக