ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

ஒட்டகச் சிவிங்கி

 பெயர்க்காரணம்

ஒட்டகச் சிவிங்கி ஆப்பிரிக்காவில் காணப்படும் பாலூட்டியாகும். தற்போது உலகில் இருக்கும் விலங்குகளில் உயரமானது ஒட்டகச் சிவிங்கி தான். ஒட்டகம் மாதிரி உயரமாகவும், புலி இனங்களில் ஒன்றான சிவிங்கி (Leopard) மாதிரி புள்ளிகளை பெற்றிருப்பதாலும் இந்தப் பெயர் வந்தது. ஆண் ஒட்டகச் சிவிங்கிகள் 16 முதல் 18 அடி உயரமும் (4.8 முதல் 5.5 மீட்டர்) 900 கிலோ கிராம் வரை எடையும் கொண்டவையாக வளர்கின்றன. பெண் ஒட்டகச் சிவிங்கிகள் ஆண்களைவிட பொதுவாக உயரத்திலும் எடையிலும் குறைந்தவை. ஒட்டகச் சிவிங்கி இரு சோடி கால்களும் ஒரே நீளமுள்ளவை என்றாலும் தோள்பட்டை எலும்புகள் மிகவும் நீண்டு வளர்ந்திப்பதால் அவற்றோடு இணைந்துள்ள முன்கால்கள், பின்னங்கால்களை விட உயரமாக இருப்பது போல தோன்றும். (ஆதாரம் தேவை) இவற்றின் இதயம் 10 கிலோ கிராம் நிறையுடையது.

சாதுவான விலங்கு

ஒட்டகச் சிவிங்கிகள் வெப்பமான வறண்ட பகுதிகளில் தான் வாழ்கின்றன. மர இலைகளைத் தின்று வாழ்கின்றன. மர இலைகளை வாயில் திணித்துக்கொள்வதற்கு வசதியாக நாக்கு நீண்டிருக்கிறது. நாக்கின் நீளம் 45 செ.மீ. நாக்கை வேண்டும்போது நீட்டிக்கொள்ளலாம், சுருக்கிக் கொள்ளலாம். இரை உண்ணும் போதும், புழுதிக்காற்று வீசும்போதும் இது தனது மூக்குத் துவாரங்களை மூடிக்கொள்கிறது. ஒட்டகம் போலவே நாள் கணக்கில் தண்ணீர் குடிக்காமல் தாக்குப்பிடிக்கும். தண்ணீர் குடிக்கும் போதும் கொஞ்சம் தான் குடிக்கும். தரையில் உள்ள சிறு தாவரங்களை உண்ணும்போது முன் கால்களை பரப்பிக்கொள்ளும். அப்போது தான் வாய் தரைக்கு வரும். ஒட்டகச் சிவிங்கிகள் குரல் எழுப்பி சத்தம் போடாது. மிகவும் சாதுவான விலங்கு. ஆனால் கோபம் வந்தால் பின்னங்கால்களால் உதைக்கும். உதைக்கும்போது பலமாக அடிபடும். சிங்கம் தான் இதன் முக்கிய எதிரி. வலிமை மிகுந்த சிங்கத்தை கூட தனது பின்னங்கால்களால் பலமாக உதைத்து காயப்படுத்தும். மணிக்கு 60 கி.மீ. வேகம் வரை ஓடும். 14 ஆண்டுகள் வரை உயிர்வாழும். ஒட்டகச் சிவிங்கிகள் 14 முதல் 15 மாத கருப்ப காலத்தின் பின் ஒரு குட்டியை ஈனுகின்றன.

அழிந்துவரும் விலங்கு

ஒட்டகச் சிவிங்கியின் கழுத்து நீளமாக இருந்தாலும், அதில் ஒரு ஆச்சரியம் உள்ளது. பொதுவாக பாலூட்டி விலங்குகள் எல்லாவற்றுக்குமே கழுத்தில் ஏழு எலும்புகள் உண்டு. மிக சிறியதாக இருக்கும் சுண்டெலிக்கு கூட இது உண்டு. நீண்ட கழுத்தை உடைய ஒட்டக சிவிங்கிக்கும் அது உண்டு. கழுத்தில் குட்டையான பிடரி ரோமங்கள் இருக்கும். இதன் கொம்புகள் தோலாலும், ரோமத்தாலும் மூடப்பட்டிருக்கின்றன. முனைகளில் குஞ்சம் போன்ற ரோமங்கள் உள்ளன. அழிந்துவரும் விலங்கின பட்டியலில் ஒட்டகச்சிவிங்கியும் உண்டு தோலுக்காக
இது வேட்டையாடப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக