கரடி
கரடி (Bear), ஒரு ஊனுண்ணிப் பாலூட்டி விலங்கு. இவ்வினத்தைச் சேர்ந்த பனிக்கரடிகளும், கொடுங்கரடிகள் (Grizzly bear) என்னும் பழுப்பு நிறக்கரடிகளும். ஊனுண்ணிப் பாலூட்டிகள் யாவற்றினும் மிக பெரியது. ஆசியக் கருங்கரடி போன்ற சில சிறியவகைக் கரடிகள் அனைத்துண்ணிகளாக உள்ளன.உயிரின அறிவியலார் கரடியினத்தை ஊர்சிடே (Ursidae) என்னும் பெரும் பிரிவில் காட்டுவர். ஊர்சசு (Ursus) என்றால் இலத்தீன் மொழியில் கரடி என்று பொருள். இதன் அடிப்படையில் ஊர்சிடே என்பது இவ்வினத்தைகுறித்தது. இந்த ஊர்சிடேயின் உட்பிரிவில் ஐந்தே ஐந்து இனங்கள் தாம் உள்ளன. அவற்றுள் நான்கினுடைய உட்பிரிவில் ஒவ்வொன்றுக்கும் ஒரு வகைதான் உள்ளன. ஆப்பிரிக்கக் கண்டத்திலும், ஆஸ்திரேலியாவிலும் கரடிகள் இல்லை. தென் அமெரிக்காவின் வட பகுதியில் மட்டும் சிறு நிலப்பரப்பிலே சில வகை கரடிகள் வாழ்கின்றன. கரடிகள் நல்ல மோப்பத் திறனும் கேட்கும் திறனும் கொண்டவை; உடலில் அதிக முடிகளைக் கொண்டுள்ளன. மேலும் இவை இரண்டு கால்களினால் நிற்க வல்லவை.
கரடி இன வகைகள்
- பனிக்கரடி
- கொடுங்கரடி
- அமெரிக்கக் கருங்கரடி
- வெண்கண்வளையக் கரடி இரு கண்களைச்சுற்றியும் இருவெள்ளையான வளையம் இருப்பதால் இதனை மூக்குகண்ணாடிக் கரடி என்றும் அழைப்பர்.
- அசையாக்கரடி சுலாத்துக் கரடு (Sloth bear)
- ஆசியக் கருங்கரடி
- மலேயக் குறுங்கரடி யாவற்றினும் சிறிய கரடி.
தமிழில் "கரடி" என்ற சொல் பாவனை
- கரடி சந்தை
- 'கரடி' விடுறது
- சிவபூசையில் 'கரடி' போல
- கரடிபோலே வந்து விழுந்தான்
- கரடிக்கூடம்
- கரடிப்பறை
- கரடிகை
- கரடியுறுமல்
- கரடிவித்தை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக