வியாழன், 26 ஏப்ரல், 2012

தொன்மா

                                                         
 தொன்மா (Dinosaur, டைனசோர் (கேட்க) என்பது ஏறத்தாழ 230 மில்லியன்ஆண்டுகளுக்கு முன் தொடங்கி 160 மில்லியன் ஆண்டுகள் பூமியின் நிலத் தரையின் மீது முழு வல்லாண்மையுடன் வாழ்ந்து வந்த முதுகெலும்புள்ளவிலங்கினங்கள் ஆகும். இவை ஏறத்தாழ 65 மில்லியன் ஆண்டுகளுக்கும் முன் ஒரு பேரழிவு நிகழ்வு காரணமாக முற்றிலுமாய் அழிந்து போயிற்று.

தொன்மாக்கள் வாழத் தொடங்கிய காலத்திற்கு சற்று முன்னர்வரை நில உருண்டையில் ஒரேயொரு தொடர்ந்த நிலத்தரைப்பகுதிதான் பெரிய கண்டமாக இருந்ததென்றும், அதனை முற்றுமாய்ச் சூழ்ந்து ஒரேயொரு பெருங்கடல் மட்டும்தான் இருந்தென்றும் அறிஞர்கள் கருதுகின்றனர் (பார்க்க:ஒருநிலக் கொள்கை). தொன்மாக்கள் வாழ்ந்த பொழுது தரைநிலப்பகுதிகள் கண்டங்களாக பிரிந்து நகரத் தொடங்கிய பொழுதும், இயற்கையாக அமைந்த நிலப்பாலங்கள் வழி தொன்மாக்கள் அன்றிருந்த தரைநிலம் முழுவதும் திரிந்தன.


தொன்மா என்னும் பெயரும் அக்காலத்தில் வாழ்ந்த உயிரினங்களும்

தொன்மா என்பது இங்கே முற்றிலுமாய் அழிந்து போன விலங்கினங்களை மட்டுமே குறிக்கும் ஒரு சொல்லாகப் பயன்படுகின்றது. மா என்றால் விலங்கு, தொல் என்றால் பழைய, எனவே தொல் + மா = தொன்மா = தொல் பழங்காலத்தில் இருந்த விலங்கினம். தொன்மா என்று கூறினாலும், இவைகளை போலவே தொல் பழங்காலத்தில் இருந்து வாழ்ந்து இன்றும் நம்மோடு இருக்கும் முதலை போன்ற இனங்களை இச்சொல் குறிக்காது. தொன்மாக்கள் வாழ்ந்த காலத்தில் அதே காலத்தில் முதலைகளும்,தவளைகளும், பல்லிகளும், ஆமைகளும், நத்தைகளும், பூச்சிகளும்வாழ்ந்திருந்தன. கடலில் கிளிஞ்சலுயிரி, கணவாய் வகைகள் (squids),இளகிநீரிகள் (jelleyfish), விண்மீனிகள் (நட்சத்திர மீன்கள்), சுறா மீன்கள், பிறமீன் இனங்கள், இன்று மறைந்துவிட்ட கடலில்வாழ்ந்த இச்தியோசோர்,பிளெசியோசோர், ஊர்வன உடலமைப்புகொண்ட வௌவால் போன்ற இறக்கைகள் கொண்ட இப்டெரோசோர் மட்டுமல்லாமல் சிறிய எலிஅளவிலான பாலூட்டி வகைகளும் வாழ்ந்தன. அக்காலத்தில் பூக்கும் மரம்செடிகொடிகள் இன்னும் நில உலகில் தோன்றவில்லை. (பார்க்க: நிலவியல் உயிரின ஊழிக் காலங்கள்). தொன்மாக்களில் ஒரு வகையான தெரோபாடு என்னும் ஒரேயொரு இனத்தின் கிளை மட்டும் தப்பி இன்று பறவை இனமாக உள்ளதாக அறிஞர்கள் கருதுகிறார்கள். இத் தொன்மாக்கள் என்பவை மிகப்பெரும்பாலும் நீரில் வாழாது நிலத்தின் தரைமீது வாழ்ந்த உயிரினங்களாகும். பறக்கவல்ல ஒருசில இனங்களும் இருந்தன.
தொல்பழங்காலத்தில் வாழ்ந்து அழிந்துபோன சிலவகை ஊர்வன விலங்குகளாகிய பெலிக்கோசோர்டைமெட்ரான்போன்றனவும், இறக்கைகள் கொண்ட இப்டெரோசோர் முதலியனவும் நீர்வாழ் விலங்காக இருந்த இச்தியோசோர்,பிளெசியோசோர்மொசசோர் முதலியனவும் இந்த தொன்மா வகையைச் சேர்ந்தவை அல்ல. தொன்மாவை ஆங்கிலத்தில் டயனசோர் (Dinosaur) என்று அழைப்பர். இவ் ஆங்கிலச்சொல் கிரேக்க மொழியில் உள்ள இருசொற்களின் கூட்டாய்ப் பெறப்பட்டது. டைனோஸ் + சோரா = டைனசோர் . டைனோஸ் (δεινός deinos ) என்றால் “கொடிய” “அச்சமூட்டும்”, “பெரிய” என்று பொருள்படும்; சோரா அல்லது சௌரா ( σαύρα , saura ) என்றால் “பல்லி”, “ஊர்வன” என்று பொருள்படும். எனவே இத் தொன்மாக்களைக் கொடும்பல்லி அல்லது கொடிய ஊர்வன என்றும் சொல்லலாம்.
தொன்மா கண்டுபிடிப்பு                                                                          
ரிச்சர்டு ஓவன் (Richard Owen) என்னும் ஆங்கிலேய தொல்லுயிரியல் ஆய்வளர், 1842 ஆம் ஆண்டில் தான் கண்டுபிடித்ததொல்லுயிரெச்சங்களைக் கொண்டு, அவ்விலங்குகள், பல்லி போன்ற ஊர்வன வகையைச் சேர்ந்த சோரியன் என்னும் உயிரினத்தின் ஓர் உட்பிரிவில் டயனோசோரியா என்னும் ஒரு புதிய பிரிவில் சேர்த்தார். எனவே இவரே இந்த புதியடயனசோர் என்னும் தொன்மாக்களை முதன் முதலில் வகைப்படுத்தியவர். கிரேக்கமொழிச் சொற்களில் இருந்து இப்பெயர் சூட்டியவரும் இவரே. ரிச்சர்டு ஓவன் அவர்கள் டயன்சோர் எனப் பெயர் சூட்டக் காரணம் அதன் கொடிய பற்களும் அது ஊட்டிய அச்சத்தாலும் அல்ல, ஆனால் அது வாழ்ந்த காலத்தில் அது எத்தனை வியப்பூட்டும் பெரிய விலங்காக இருந்திருக்கும் என்னும் பெருமை கருதி கொடும்பெரும்பல்லி என்று பொருள் தரும் டயனசோர் எனப் பெயரிட்டார்.
தொன்மாக்கள் மிகப்பல விதமான இனங்களைச் சேர்ந்த விலங்குகள் ஆகும். 2006ல் நடத்திய ஆய்வின்படி குறைந்தது கட்டாயம் 527 வெவ்வேறு தொன்மா (டயனசோர்) இனங்கள் உள்ளன. ஆனால் மொத்தம் 1844 தொன்மா இனங்கள் இருந்திருக்கக்கூடும் என கணிக்கின்றனர் .
தொன்மாக்களில் சில இனங்கள் இலையுணவு (மரஞ்செடி கொடி உணவுகள்) உண்பனவாகவும், சிலஊனுண்ணிகளாகவும் இருந்தன. சில இருகால்களில் நடப்பனவாகவும், சில நான்கு கால்களில் நடப்பனவாகவும்,அம்மோசோரஸ் இகுவானடோன் போன்ற சில தொன்மாக்கள் தேவைக்கேற்றார் போல இருகால்களிலுமோ அல்லது நான்கு கால்களிலுமோ நடக்கவல்லவனவாய் இருந்தன. இன்று அறியப்பட்ட எல்லா தொன்மாக்களும் ஏறத்தாழ நிலத்தில் தரை மீது வாழ்ந்தனவே; நீருள்ளோ, பறந்தோ வாழவில்லை. 
உருவ பரும வேறுபாடுகள்                                                                 

அளவை ஒப்பிட்டுப் பார்க்கஇயோராப்டர் என்னும் தொன்மாவும் மனிதனும்.
சோராப்போடா போன்ற சில தொன்மாக்கள் இன்றுள்ள திமிங்கிலம் போன்ற ஒரு சில விலங்குகளைத் தவிர மற்ற எல்லா விலங்குகளைக்காட்டிலும் மிக மிகப்பெரியதாக இருந்தன. நீலத் திமிங்கிலம் என்பது 190,000 கிலோ.கி (209 டன்) எடை கொண்டதாகவும் 33.5 மீட்டர் (110 அடி) நீளம் கொண்டதாகவும் இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும். தொன்மாக்களை ஒப்பிட இன்றுள்ள யானை கூட மிகமிகச் சிறியதாகத் தென்படும்.
பெரும்பாலான தொன்மாக்கள் சோராப்போடா போல் பெரியன அல்ல. சராசரியாக பெரும்பாலான தொன்மாக்கள் 500 கிலோ.கி எடையுள்ளனவாக இருந்ததாக கணக்கிடுகின்றனர். தொன்மாக்களில் 63 இனங்களின் சராசரி எடை 850 கிலோ.கி எனவும் அமெரிக்காவின் கிரிஸ்லி கரடி அளவினதே என்றும் கணக்கிட்டுள்ளனர். தொன்மாக்களில் சரி பாதியானவை 2 டன் எடைக்கும் குறைவானதே என்கின்றனர். இன்றுள்ள பபலூட்டிகளின் சராசரி எடை 1 கிலோ கிராமுக்கும் குறைவானதே (863 கிராம்) 
தொன்மாக்களின் சிறப்பான உடலமைப்புகள்

ALM . FAIZAN  
இன்றுவரை நிகழ்ந்துள்ள எராளமான கண்டுபிடிப்புகளை கணக்கில் கொண்டால் எல்லாத் தொன்மாக்களுக்கும் பொருந்தி வரும் பொது அமைப்புகள் அரிதாகிவந்தாலும், ஏறத்தாழ எல்லா தொன்மாக்களுமே மிகுதொல் இனமாகிய ஆர்க்கியோசோர்-வகையான எலும்பு அமைப்பின் மாறுதலாகவே உள்ளன.

ஞாயிறு, 8 ஏப்ரல், 2012


ஒட்டகம்

ஒட்டகம் என்பது பொதுவாக பாலைவனங்களில் வாழும் தாவர உண்ணி வகையைச் சேர்ந்த பாலூட்டி விலங்கு ஆகும். பொதுவாக ஒட்டகம் என்று அழைக்கப்படும் ஒட்டகப் பேரினத்தில் ஆறு சிற்றினங்கள் உள்ளன. இவை ஆசியா, வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள பாலைநிலங்களை தாயகமாகக் கொண்டவை. இவை பொதுவாக 30 முதல் 50 ஆண்டுகள் வரை உயிர்வாழ்கின்றன.

ஒட்டகங்களை மனிதர்கள் சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும் ஒட்டகங்கள் அவற்றின் பால், இறைச்சிக்காகவும் சுமைகளை ஏற்றிச் செல்லவும் பயன்படுகின்றன.

ஒட்டகத்தின் மிகவும் புகழ்பெற்ற பண்பு, நீரில்லாமல் பலநாள் வாழக்கூடியது. பொதுவாக 4-5 நாட்கள் நீர் அருந்தாமல் பாலைநிலப்பகுதிகளில் வாழக்கூடிய தன்மை அதற்கு உண்டு. மேய்வதற்குப் புல் போன்ற உணவு கிடைத்தால் 10 மாதங்கள் வரையிலும் கூட நீர் அருந்தாமல் இருக்கக்கூடியது. மற்ற விலங்குகளை போலல்லாமல், நீர் அருந்தாமல் இருந்த நிலையாகிய உலர் நிலையில் இருந்து மீண்டு நீர் அருந்தும்பொழுது ஏறத்தாழ 100 லிட்டர் நீர் அருந்தவல்லது. அப்படி நீர் அருந்தியவுடன் 5-10 நிமிடங்களில் உடலில் நீர்ப்பதம் ஏறிவிடுகின்றது. பிற விலங்குகளில் நீரற்ற உலர் நிலையில் இருந்து இவ்வாறு விரைவாக நீர்ப்பதம் அடைய முடியாது (ஏனெனில் இரத்தத்தில் திடீர் என்று இவ்வளவு நீர்த்த நிலை ஏற்பட்டால் சிவப்புக் குருதியணுக்கள், ஆஸ்மாட்டிக் அழுத்தம் என்னும் அடர்த்தி அதிகமான பகுதி நோக்கி நகரும் விரவல் விளைவால், வெடித்துவிடும். ஆனால் ஒட்டகத்தின் சிவப்பணுக்களின் சவ்வுப்படலம் அதிக அளவு விரிந்து கொடுக்கும் தன்மை கொண்டதால், இவ்வாறு நிகழ்வதில்லை)

உலகின் இரண்டாவது குளோனிங் ஓட்டகம்

ஒட்டகத்தின் உடலின் வெப்பநிலை 34 ° செல்சியஸ் முதல் 41 ° செல்சியஸ் (106 °F) வரை மாற வல்லது. ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது, மனிதர்களின் உடல் வெப்ப நிலை 2-3 ° செல்சியஸ் வேறுபாடுகளைத்தான் தாங்க வல்லது. இது தவிர, ஒட்டகங்களின் உடல் பொதுவாக வியர்வையை வெளியிடுவதில்லை. இதனால் உடல்நீர் வெளியாவது குறைகின்றது. நீரில்லாத பொழுது, தன்னுடைய சிறுநீரையும் பெருமளவு குறைக்கவல்லது. இவ்வகையான உடலமைப்புகளால் நீரற்ற பாலைநிலங்களில் பயணம் செய்ய மிகச்சிறந்த விலங்காகக் கருதப்படுகின்றது.

ஒட்டகச் சிவிங்கி

 பெயர்க்காரணம்

ஒட்டகச் சிவிங்கி ஆப்பிரிக்காவில் காணப்படும் பாலூட்டியாகும். தற்போது உலகில் இருக்கும் விலங்குகளில் உயரமானது ஒட்டகச் சிவிங்கி தான். ஒட்டகம் மாதிரி உயரமாகவும், புலி இனங்களில் ஒன்றான சிவிங்கி (Leopard) மாதிரி புள்ளிகளை பெற்றிருப்பதாலும் இந்தப் பெயர் வந்தது. ஆண் ஒட்டகச் சிவிங்கிகள் 16 முதல் 18 அடி உயரமும் (4.8 முதல் 5.5 மீட்டர்) 900 கிலோ கிராம் வரை எடையும் கொண்டவையாக வளர்கின்றன. பெண் ஒட்டகச் சிவிங்கிகள் ஆண்களைவிட பொதுவாக உயரத்திலும் எடையிலும் குறைந்தவை. ஒட்டகச் சிவிங்கி இரு சோடி கால்களும் ஒரே நீளமுள்ளவை என்றாலும் தோள்பட்டை எலும்புகள் மிகவும் நீண்டு வளர்ந்திப்பதால் அவற்றோடு இணைந்துள்ள முன்கால்கள், பின்னங்கால்களை விட உயரமாக இருப்பது போல தோன்றும். (ஆதாரம் தேவை) இவற்றின் இதயம் 10 கிலோ கிராம் நிறையுடையது.

சாதுவான விலங்கு

ஒட்டகச் சிவிங்கிகள் வெப்பமான வறண்ட பகுதிகளில் தான் வாழ்கின்றன. மர இலைகளைத் தின்று வாழ்கின்றன. மர இலைகளை வாயில் திணித்துக்கொள்வதற்கு வசதியாக நாக்கு நீண்டிருக்கிறது. நாக்கின் நீளம் 45 செ.மீ. நாக்கை வேண்டும்போது நீட்டிக்கொள்ளலாம், சுருக்கிக் கொள்ளலாம். இரை உண்ணும் போதும், புழுதிக்காற்று வீசும்போதும் இது தனது மூக்குத் துவாரங்களை மூடிக்கொள்கிறது. ஒட்டகம் போலவே நாள் கணக்கில் தண்ணீர் குடிக்காமல் தாக்குப்பிடிக்கும். தண்ணீர் குடிக்கும் போதும் கொஞ்சம் தான் குடிக்கும். தரையில் உள்ள சிறு தாவரங்களை உண்ணும்போது முன் கால்களை பரப்பிக்கொள்ளும். அப்போது தான் வாய் தரைக்கு வரும். ஒட்டகச் சிவிங்கிகள் குரல் எழுப்பி சத்தம் போடாது. மிகவும் சாதுவான விலங்கு. ஆனால் கோபம் வந்தால் பின்னங்கால்களால் உதைக்கும். உதைக்கும்போது பலமாக அடிபடும். சிங்கம் தான் இதன் முக்கிய எதிரி. வலிமை மிகுந்த சிங்கத்தை கூட தனது பின்னங்கால்களால் பலமாக உதைத்து காயப்படுத்தும். மணிக்கு 60 கி.மீ. வேகம் வரை ஓடும். 14 ஆண்டுகள் வரை உயிர்வாழும். ஒட்டகச் சிவிங்கிகள் 14 முதல் 15 மாத கருப்ப காலத்தின் பின் ஒரு குட்டியை ஈனுகின்றன.

அழிந்துவரும் விலங்கு

ஒட்டகச் சிவிங்கியின் கழுத்து நீளமாக இருந்தாலும், அதில் ஒரு ஆச்சரியம் உள்ளது. பொதுவாக பாலூட்டி விலங்குகள் எல்லாவற்றுக்குமே கழுத்தில் ஏழு எலும்புகள் உண்டு. மிக சிறியதாக இருக்கும் சுண்டெலிக்கு கூட இது உண்டு. நீண்ட கழுத்தை உடைய ஒட்டக சிவிங்கிக்கும் அது உண்டு. கழுத்தில் குட்டையான பிடரி ரோமங்கள் இருக்கும். இதன் கொம்புகள் தோலாலும், ரோமத்தாலும் மூடப்பட்டிருக்கின்றன. முனைகளில் குஞ்சம் போன்ற ரோமங்கள் உள்ளன. அழிந்துவரும் விலங்கின பட்டியலில் ஒட்டகச்சிவிங்கியும் உண்டு தோலுக்காக
இது வேட்டையாடப்படுகிறது.



கரடி

கரடி (Bear), ஒரு ஊனுண்ணிப் பாலூட்டி விலங்கு. இவ்வினத்தைச் சேர்ந்த பனிக்கரடிகளும், கொடுங்கரடிகள் (Grizzly bear) என்னும் பழுப்பு நிறக்கரடிகளும். ஊனுண்ணிப் பாலூட்டிகள் யாவற்றினும் மிக பெரியது. ஆசியக் கருங்கரடி போன்ற சில சிறியவகைக் கரடிகள் அனைத்துண்ணிகளாக உள்ளன.
உயிரின அறிவியலார் கரடியினத்தை ஊர்சிடே (Ursidae) என்னும் பெரும் பிரிவில் காட்டுவர். ஊர்சசு (Ursus) என்றால் இலத்தீன் மொழியில் கரடி என்று பொருள். இதன் அடிப்படையில் ஊர்சிடே என்பது இவ்வினத்தைகுறித்தது. இந்த ஊர்சிடேயின் உட்பிரிவில் ஐந்தே ஐந்து இனங்கள் தாம் உள்ளன. அவற்றுள் நான்கினுடைய உட்பிரிவில் ஒவ்வொன்றுக்கும் ஒரு வகைதான் உள்ளன. ஆப்பிரிக்கக் கண்டத்திலும், ஆஸ்திரேலியாவிலும் கரடிகள் இல்லை. தென் அமெரிக்காவின் வட பகுதியில் மட்டும் சிறு நிலப்பரப்பிலே சில வகை கரடிகள் வாழ்கின்றன. கரடிகள் நல்ல மோப்பத் திறனும் கேட்கும் திறனும் கொண்டவை; உடலில் அதிக முடிகளைக் கொண்டுள்ளன. மேலும் இவை இரண்டு கால்களினால் நிற்க வல்லவை.

கரடி இன வகைகள்

  • பனிக்கரடி
  • கொடுங்கரடி
  • அமெரிக்கக் கருங்கரடி
  • வெண்கண்வளையக் கரடி இரு கண்களைச்சுற்றியும் இருவெள்ளையான வளையம் இருப்பதால் இதனை மூக்குகண்ணாடிக் கரடி என்றும் அழைப்பர்.
  • அசையாக்கரடி சுலாத்துக் கரடு (Sloth bear)
  • ஆசியக் கருங்கரடி
  • மலேயக் குறுங்கரடி யாவற்றினும் சிறிய கரடி.

தமிழில் "கரடி" என்ற சொல் பாவனை

  • கரடி சந்தை
  • 'கரடி' விடுறது
  • சிவபூசையில் 'கரடி' போல
  • கரடிபோலே வந்து விழுந்தான்
  • கரடிக்கூடம்
  • கரடிப்பறை
  • கரடிகை
  • கரடியுறுமல்
  • கரடிவித்தை



                                                                                                                   
                                                                                                              

பசு

பசு (மாடு) பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு. பசுவினுடைய பால் பல சத்துக்கள் நிறைந்ததுள்ள காரணத்தினால் மனிதன் அதனை ஒரு முக்கிய உணவாகக் கொண்டுள்ளான். இந்தியக் கலாச்சாரத்தில் பசு போற்றப்படும் ஒரு விலங்காக உள்ளது. புராணங்களின்படி காமதேனுவும், நந்தினியும் தேவலோகப் பசுக்கள்.

படங்களின் தொகுப்பு