கரு நாகத்தின் அமைப்பு 
:-
பொதுவாக இந்த பாம்புகள் 12 முதல் 13
அடி நீளம் வரை வளருகின்றன. 6
கிலோ வரை
எடை கொண்டதாக இருக்கின்றன. இவற்றில் தென்
தாய்லாந்து நாட்டில் உள்ள
நக்கோன்-சி-தம்மாரத் மலையில் பிடிபட்ட ஒரு பாம்பு 18.5 அடி நீளம் இருந்தது. இதற்கு மேலாக
லண்டன் உயிரினக்காட்சி சாலையில் இருந்த ஒரு பாம்பு 18.8 அடி நீளம் இருந்ததாகவும் கூறப்படுகின்றது. இவை பெரும்பாலும் மஞ்சள் கலந்த பளுப்பு அல்லது பாசியின் பச்சை நிறத்திலான உடலில் மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தினால பட்டைகளுடன காணப்படுகின்றன. இப்பாம்புகள் மிகப்பெரிய கண்களுடன் வட்டவடிவத்திலன கட்பார்வை கொண்டவையாகும். கருநாகத்தின் தோலில்
பாம்புச் செதில்கள் காணப்படும். பாம்புகளில் இச்செதில்களின் எண்ணிக்கையும் மற்றும் வடிவமும் ஒரு இனத்திலிருந்து மற்றொரு இனத்தை வேறுபடுத்திக் கண்டறிய உதவுகிறது. இந்த நிற அமைப்பு இளம் பருவத்தில் மிகவும் சற்று வெளிச்சமாக காணப்படும்.ஆண் இனம் பெண்ணை விட அதிக நீளமாகவும், தடிமனாகவும் இருக்கின்றன. இவற்றின் வாழ்நாள் 20 ஆண்டுகள் ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக