திங்கள், 13 பிப்ரவரி, 2012

  • அறுக்குளா
  • அவுரி - CHANNA MARULIUS
  • அம்புட்டன் வாழ - CHITALA CHITALA
  • அனுவ மீன் - DIPLOPRION BIFASCIATUM
  • அத்வாணி திருக்‍கை - GYMNURA POECILURA
  • அடுக்குப்பல் சுறா - HEMIPRISTIS ELONGATA
  • அவிலி (அவீலீ) - LIZA
  • அமட்டீகாட்டீ - MENE MACULATA
  • அம்பட்டண் கத்தி - NOTOPTERUS NOTOPTERUS
  • அதவாழன் திருக்‍கை - PISTANACHUS SEPHEN
  • அகலை - RASTRALLIGER KANAGURTA
  • அமீனீ உளுவை - RHICODON TYPUS
  • அடுப்பு பொறுவா - THRYSSA MALABARICA

  • ஆட்கான்டி - BARILLIUS GATENSIS

  • இருங்கெளுத்தி - PLOTOSUS கனிஸ் 
ஒ 
  • ஒட்டி

  • ஓரா

  • கட்லா - Catla, இந்தியப் பெருங்கெண்டை இன மீன்களில் ஒன்று.
  • கயல்
  • கருமுறைச்செல்வி
  • கருந்திரளி
  • கலவாய்
  • காரல் மீன்
  • காரப்பொடி
  • கிழக்கன்
  • கீச்சான் - TERAPON JARBUA
  • கீச்சான் -TIGERFISH
  • கிளி மீன்
  • கீரி மீன்- AMBLYGASTER CLUPEOIDES
  • கீளி மீன்
  • குஞ்சுப்பாரை
  • குதிப்பு - False trevally (Lactarius spp.). வட தமிழகத்தில் சுதும்பு என வழங்கப்படுகிறது.
  • கும்புளா
  • கும்டுல் - SCOPLOPSIS TAENIOPTERUS
  • கூந்தா
  • கூரல்
  • கெலவல்லா
  • கெழுத்தி - Catfish (பொதுப் பெயர்)
  • கெளிறு
  • கெண்டை - Carp (பொதுப் பெயர்)
  • கொடுவா - Asian seabass, called as barramundi in Australia.
  • கொண்டை - salmon
  • கொய்
  • கோலா மீன் - COROMANDEL FLYING FISH
  • கோரோவா - BLOTCHED CROAKER, NIBEA MACULATA
  • கோர சுறா - BROADFIN SHARK, LAMIOPSIS TEMMINCKII
  • கோலா -HIRUNDICHTHYS COROMANDELENSIS

  • சங்கரா
  • சாம்பல் மீன் - Grey mullet
  • சாளை - Sardines
  • சிறையா
  • சுறா- Shark
  • சுதும்பு- False trevally (Lactarius spp.) தென் தமிழகத்தில் குதிப்பு என்று அழைக்கப்படுகிறது
  • சூரைமீன் - Tuna
  • சூடை - Sardines
  • சூடைவலை
  • செவ்விளை - Red snapper
  • சீலா - தென் தமிழகத்தில் Seer fish, வட தமிழகத்தில் Barracuda; தென் தமிழகத்தில் நெய்மீன் என்றும் அழைக்கப்படுகிறது
  • சாதா கெண்டை - Common carp
  • செம்மீன் - Shrimp or prawn, இறால் அல்லது எரா என்று பரவலாக அழைக்கப்படுகிறது. முதுகெலும்பில்லா க்ரஸ்டீசியா வகையைச் சேர்ந்தது. மீன் அல்ல.
  • சிலேபி(ஜிலேபி) - Tilapia

  • டொல்பின் இது பாலூட்டி. மீன் அல்ல.

  • திருக்கை - Skates and Rays
  • திரளி
  • திமிங்கலம்- whale (பாலூட்டி. மீன் வகையல்ல)
  • திலாப்பியா - tilapia
  • தளபொத்து

  • நவரை
  • நெத்திலி - Anchovy

 

  • பாரை மீன்
  • பாலை மீன்
  • பால் மீன்
  • பளயா
  • புல் கெண்டை - Grass carp
  • பன்னா மீன்


  • மணலை
  • முரல்
  • மண்ணா
  • மிர்கால், மிருகால் - Mrigal, இந்தியப் பெரும் கெண்டைகளில் ஒன்று
  • மத்தி மீன்
  • முண்டான்

  • ரோகு - Rohu, இந்தியப் பெருங் கெண்டைகளில் ஒன்று.

  • லோகு
  • வஞ்சிரம் மீன் - Seer fish or Spanish mackerel. தென் தமிழகத்தில் சீலா என்றும் நெய்மீன் என்றும் அழைக்கப்படுகிறது
  • வவ்வால் மீன் - Pomfret, தென் தமிழகத்தில் வாவல் என்று வழங்கப்படுகிறது
  • வளையாமீன்
  • வாளை மீன் - Belt fish or Ribbon fish.
  • விளை - Emperor fish
  • விரால் மீன் - நன்னீரில் வாழும் Murrel அல்லது Snakehead மீன்; உவர் நீரில் வாழும் Cobia
  • விலாங்கு - Eel
  • வெள்ளிக் கொண்டை - Silver carp, சீனப் பெருங் கெண்டை மீன்களில் ஒன்று
  • வெள்ளைக்கிழங்கா
  • வெள்ளை அரிஞ்சான் - CIRRHINUS CIRRHOSUS
  • வெள்ளி அரிஞ்சான் - ENCHELIOPHIS HOMEI
  • வாளை மீன் - SWORD-FISH

புதன், 8 பிப்ரவரி, 2012


பொன் மீன்

வீடுகளில் அழகுக்காக வளர்க்கப்படும் நன்னீர் மீன்களில் பொன்மீன் (Gold Fish) எனப்படும் மீன் மிகப் பிரபல்யமானதாகும். சைபிரினியா (Cyprinidae) எனும் கார்ப் (Carp) குடும்பத்தைச் சேர்ந்த இம்மீனினத்தின் விலங்கியல் பெயர் கராசியஸ் ஒராட்டஸ் (Carassius auratus) என்பதாகும். இந்த இனம் ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் காணப்படுகின்ற கராசியஸ் வெல்கரிஸ் (Carassius vulgaris) எனும் மீனினத்திலிருந்தே தோன்றியிருக்கிறது.

நிற வகைகள்

பொன் மீனில் பொதுவான நான்கு நிற வகைகள் காணப்படுகின்றன. நரை நிறம், கறுப்பு, சிவப்பு, நிறமற்றது என்பனவே இவ்வகைகளாகும். எனினும், இவை தவிர்ந்த வேறு நிறமுள்ள வகைகளும் அசாதாரண வடிவமுடையனவும் உண்டு. இவை பெரும்பாலும் நோய் நிலை காரணமாக ஏற்படும் வடிவ மாற்றங்களாகும். மண்டையோட்டுக்கு வெளியே நீண்டிருக்கும் விழிக்கோளங்களைக் கொண்டவை, இரட்டை வாலுடையவை, வால் இல்லாதவை, அசாதாரணமாக நீண்ட செட்டைகளை உடையவை முதலின இவ்வாறான திரிபு வடிவங்களாகும்.

நிறை

பொதுவாகப் பொன் மீன்கள் ஏனைய கார்ப் (Carp) குடும்ப மீன்களை விட நிறையில் குறைந்தவை. எனினும், 5 கிலோகிராம் வரை நிறையுடைய பொன்மீன்களும் இருந்துள்ளன.

வரலாறு

பொன்மீன்களைத் தேர்ந்தெடுத்து வளர்க்கும் வழக்கம் கி.பி. 960ம் ஆண்டளவில் சீனாவில் ஆரம்பமாகியிருக்கின்றது. நீண்ட வாலுடைய பொன்மீன் வகையொன்று முதன்முதலாக டச்சுக்காரர்களால் 17ம் நூற்றாண்டில் ஐரோப்பாவுக்குக் கொண்டுச் செல்லப்பட்டது. இதனை அவர்கள் ஜாவாப் பகுதியிலிருந்து கொண்டு சென்றனர்.

ஆயுள் காலம்

வீடுகளில் வளர்க்கப்படும் பொன்மீன்கள் சுமார் 25 வருடங்கள் வரை உயிர்வாழக்கூடும். எனினும், இயற்கையாக நீர் நிலைகளில் வாழ்பவை குறைந்த ஆயுளுடையவை. பறவைகளும், நீர்வாழ் முலையூட்டிகளும், ஏனைய மீன்களும் வளர்ந்த பொன் மீன்களை இரையாகக் கொள்கின்றன. பொன்மீன் குஞ்சுகளுள் 80 சதவீதமானவை நோய்களுக்கும், நீர்வாழ் பூச்சிகளின் தாக்குதலுக்கும் உள்ளாகி இறந்துவிடுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

சனி, 4 பிப்ரவரி, 2012

கரு நாகத்தின் பழக்கவழக்கங்கள்

      இவை தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாக காணப்படுகின்றன. இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலை காடுகளில் காணப்படுகின்றன. தமிழ் நாட்டில் திருநெல்வேலி மாவட்ட மாஞ்சோலை மலைக்காடுகளிலும் காணப்படுகின்றன.பெரும்பாலும் அடர்ந்த காட்டுப்பகுதிகளிலேயே வசிக்கும் இவை, நீர் நிறைந்த பகுதிகளை ஒட்டியே தனது வாழ்விடத்தை அமைத்துக்கொள்கின்றன. பெருகிவரும் காடுகளை ஆக்கிரமிக்கும் முறைகளால் இவ்வினம் அழிவை சந்தித்துக்கொண்டு வருகின்றது. இருப்பினும் இவ்வினம் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் அழிந்துவரும் உயிரினங்களுக்கான 'சிகப்பு பட்டியலில்' சேர்க்கப்படவில்லை.

வேட்டையாடும் முறை

இந்த இனமானது, மற்ற பாம்புக்ளைப் போலவே தனது இரையை அதன் மணத்தைக் கொண்டே அறிகின்றது. இதன் இரட்டை நாக்குகளில் மணம் தரும் வேதிப்பொருள்களை உணரும் நுகரணுக்கள் உள்ளன. இவற்றில் இருந்து வரும் செய்தியை வாயின் மேல் அண்ணத்தில் உள்ள யாக்கோப்சன் உறுப்பு என்னும் நுகர்பொறி உணர்கின்றது. தன் இரையின் மணத்தை உணர்ந்தபின் இரட்டை நாக்கை அசைத்து, இருகாது கேள்விபோல் (stereo) உணர்ந்து துல்லியமாய் இரை எங்குள்ளது என்று உணர்கின்றது இதன் நுண்ணிய பார்வைத்திறன், 300 அடிக்கு அப்பால் உள்ள இரையின் சிறு அசைவைக்கூட அறியும் திறன் கொண்டது. மற்ற பாம்புகளை போலவே இவற்றிற்கும் நான்கு புறமும் வாய்த்தசைகள் விரியும் அமைப்பு உள்ளது. இதன் மூலம் இவை முழு இரையையும் ஒரே முறையில் விழுங்கிவிடுகின்றன. மேலும் இதன் வாய்த்தசைகள், இதன் தலையை விட பெரியதாக விரியும் தன்மை கொண்டவை. பெரும்பாலும் நாள் முழுவதும் வேட்டையாடும் இவற்றை, இரவில் காண்பது அரிது.
இவை ஒரு முறை உணவை உட்கொண்டால், அதன் பிறகு பலநாட்கள் உணவு இல்லாமல் உயிர் வாழும் தன்மை கொண்டவை.

தற்காப்பு முறைகள்

பொதுவாக இவ்வகை பாம்புகள் தனது இரையைத் தவிர மற்றவர்களை தாக்குவதில்லை. தனது வழியிலேயே செல்கின்றன. இதை தவிர்த்து எதிரிகள் இதன் வழியில் குறிக்கிடும் பொழுது, தன்னை தற்காத்துக்கொள்ளும் பொருட்டு இவை தனது உடலை, தரையில் இருந்து பல அடி எழுந்து உயர்த்தி காட்டுகின்றன. பின் படம் எடுத்து காட்டுகின்றன. மேலும் 'ஸ்ஸ்ஸ்' என்று காற்றொலி எழுப்புகின்றன. தனது சக்தியை, எதிரிகளுக்கு காட்டும் பொருட்டே இவை இவ்வகையான செயல்களில் ஈடுபடுகின்றன. இதையும் தாண்டி எதிரி தன்னை நெருங்கும்பொழுதே, இவை அவற்றை தாக்கி அதன் உடலில் நஞ்சைப் பாய்ச்சுகின்றன.

நஞ்சு


 
கருநாகத்தின் மண்டை ஓடு, பக்கவாட்டுத் தோற்றம்
கருநாகத்தின் நஞ்சானது மிகவும் கொடியது. இது தனது ஒரே கடியில் மனிதனை கொல்ல வல்லது. இது கடித்த சில நிமிடங்களிலேயே மனிதன் கோமா நிலைக்கு சென்று மரணத்தை தழுவிவிடுவான். மேலும் ஆசிய யானைகளும் இது கடித்த 3 மணி நேரத்தில் இறந்து விடும்.இதன் நஞ்சானது ஆப்பிரிக்க கறுப்பு மாம்பா பாம்புகளை விட 5 மடங்கு அதிகமானது.
உண்மையில் இதன் நஞ்சானது குறைந்த அளவு நச்சு தன்மையே கொண்டதுதான். ஆனால் இவ்வகை கருநாகங்கள் ஒரு முறை எதிரியைக் கடிக்கும் பொழுது, ஏறத்தாழ 6 முதல் 7 மில்லி அளவு நஞ்சை அதன் உடலில் செலுத்தவல்லது. இதன் காரணமாகவே இதன் எதிரிகள் உடனடியாக மரணத்தை தழுவுகின்றன.
இதன் நஞ்சை முறிக்க இதுவரை இரண்டு மருந்துகளே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முதலாவது தாய்லாந்து நாட்டில் இயங்கும் செஞ்சிலுவை சங்கம் கண்டுபிடித்தது. மற்றது இந்திய மத்திய ஆராய்ச்சி மையம் கண்டுபிடித்தது. ஆனால் இவை இரண்டும் பரவலாக கிடைக்காத காரணத்தால், இதன் கடி பட்ட பலரும் இறந்து விடுகின்றனர்.

இனப்பெருக்கம்

இந்த இனம் முட்டை இட்டு குஞ்சு பொரிக்கின்றது. தாய் கருநாகமானது தனது நீள உடல் முழுவதையும் மலையடுக்கு போல வட்டமாக சுருட்டிக்கொண்டு அதன் உள்ளே முட்டைகளை இடுகின்றது. ஒரே நேரத்தில் 20 முதல் 30 முட்டைகள் வரை இடும். தாய் தான் இட்ட முட்டைகளை வேறு விலங்குகளிடம் இருந்து பாதுகாக்க காய்ந்த இலைகளைக் குவித்து அதனுள் முட்டைகளை வைத்திருக்கும். பெரிய விலங்குகள் அருகில் வந்தாலொழிய இவை, அடைக்காப்பதை விட்டு விலகுவதில்லை. இவ்வினத்தின் இனச்சேர்க்கை சனவரியிலிருந்து மார்சு மாதம் வரை நடக்கும், பின் ஏப்ரலிலிருந்து மே மாதம் வரையில் பெண் முட்டைகளை இடும்.

படத்தொகுப்பு

கரு நாகத்தின் அமைப்பு        :-      
      
பொதுவாக இந்த பாம்புகள் 12 முதல் 13 அடி நீளம் வரை வளருகின்றன. 6 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கின்றன. இவற்றில் தென் தாய்லாந்து நாட்டில் உள்ள நக்கோன்-சி-தம்மாரத் மலையில் பிடிபட்ட ஒரு பாம்பு 18.5 அடி நீளம் இருந்தது. இதற்கு மேலாக லண்டன் உயிரினக்காட்சி சாலையில் இருந்த ஒரு பாம்பு 18.8 அடி நீளம் இருந்ததாகவும் கூறப்படுகின்றது. இவை பெரும்பாலும் மஞ்சள் கலந்த பளுப்பு அல்லது பாசியின் பச்சை நிறத்திலான உடலில் மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தினால பட்டைகளுடன காணப்படுகின்றன. இப்பாம்புகள் மிகப்பெரிய கண்களுடன் வட்டவடிவத்திலன கட்பார்வை கொண்டவையாகும். கருநாகத்தின் தோலில் பாம்புச் செதில்கள் காணப்படும். பாம்புகளில் இச்செதில்களின் எண்ணிக்கையும் மற்றும் வடிவமும் ஒரு இனத்திலிருந்து மற்றொரு இனத்தை வேறுபடுத்திக் கண்டறிய உதவுகிறது. இந்த நிற அமைப்பு இளம் பருவத்தில் மிகவும் சற்று வெளிச்சமாக காணப்படும்.ஆண் இனம் பெண்ணை விட அதிக நீளமாகவும், தடிமனாகவும் இருக்கின்றன. இவற்றின் வாழ்நாள் 20 ஆண்டுகள் ஆகும்.




கருநாகம்

கருநாகம் அல்லது இராச நாகம் (King Cobra) என்பது தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் வசிக்கும் ஒரு பாம்பு இனம் ஆகும். இதன் அறிவியற்பெயர் Ophiophagus hannah (ஓ'வியோ'வாகசு ஃஅன்னா) என்பதாகும். நச்சுப்பாம்புகளில் இதுவே உலகில் மிக நீளமானது. சுமார் 6.7 மீட்டர் (22 அடி) வரை வளரவல்லது). . பொதுவாக அடர்ந்த காட்டுப்பகுதிகளிலேயே வாழும் இந்த வகை பாம்புகள், மற்ற பாம்புகளையே பெரும்பாலும் உணவாகக் கொள்கின்றன. இதன் நஞ்சின் கடுமை ஒரே கடியிலேயே ஒரு மனிதனைக் கொல்லவல்லது. இதன் கடியால் இறப்பு நேரிடும் வீதம் 75% வரை இருக்கும்.